
The struggle against Kerala Government: Namakkal BJP request for permission to police
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கேரள அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மகளி்ரணி மாநில செயலாளர் ரோகிணி, பாஜக மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர் வக்கீல் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசிடம்அளித்த மனு விவரம்:
சபரிமலை ஐய்யப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி 2 பெண்களை சபரிமலை சன்னிதானத்திற்குள் அழைத்து சென்றனர். இந்து மக்களின் மன உணர்வுகளை மதிக்காமலும், ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆகம விதிகளை சீர்குலைக்கும் நோக்கிலும் கேரள அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் கேரள அரசை கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கருப்புக்கொடி கட்டி மத உணர்வுகளை வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.