The Tamil Nadu government requested the immediate steps to be taken to pay the teachers
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கை:
2018-19 கல்வி ஆண்டில் தமிழகத்தில் 96 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு கடந்த நவம்பர் முதல் நடப்பு ஜனவரி வரை மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆங்கிலப் புத்தாண்டில் ஊதியம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த ஆசிரியர்கள் தற்போது பொங்கல் பண்டிகைக்குள் ஊதியம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து இருக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.