The Tamilnadu Garkaththar Federation Consortium welcomed the announcement of 10 per cent reservation

தமிழ்நாடு கார்காத்தார் சங்க கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் கே. ராஜசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை:

பிற்பட்டோர் பட்டியலில்அல்லாத பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை வரவேற்பதோடு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போதய அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 16வது பிரிவில் பிற்பட்டோர் பட்டியலில் அல்லாது இருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கின்ற சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது.

இப்படி ஒரு அரசியல் சட்ட திருத்தம் வர வேண்டிய அவசியம் என்ன?

இன்று இந்தியாவில் இருக்கிற இட ஒதுக்கீடு முறை 1881 மற்றம் 1931ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இன்று இருக்கிற சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதி சார்ந்தது மட்டும் அல்ல…

இன்றைய உண்மை நிலை…

இடஓதுக்கீடு இல்லாத, உயர் ஜாதியினர் என சொல்லப்படுகிற சமூகத்தை சேர்ந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, திறமைகள் நிராகரிக்கப்பட்டு, நிஜ வாழ்கையில் நசிந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே…

உயர் ஜாதியினர் என்று சொல்லப்படுகிற இந்த பிரிவினரின், ஒரு குறிப்பிடதக்க அளவிலான மக்கள், அன்றாட உணவுக்கே கூட அவதிபடும் நிலைமையும் இருக்கத்தான் செய்கிறது..

இவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது…

OBC மற்றும் MBC பட்டியலில் இருந்தும் கூட, இதே பொருளாதார அடிப்படையில் எட்டு லட்சத்திற்கும் மேல் வருட வருமானம் உள்ளவர்கள் CREAMY LAYER என்று மத்திய அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, தற்போதய சூழ்நிலையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு என்பது பிற்பட்டோர் உட்பட அனைவருக்கும் பொருளாதார ரீதியில்தான் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்பட்டோர் பட்டியலில் இல்லாத இதர மக்களுக்கும் 10% இட ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

மேலும், இந்த 10% இட ஒதுக்கீடு மூலம், OBC, SC உட்பட நடைமுறையில் இருக்கும் எந்த பிரிவினருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.. மிக முக்கியமாக இதை அரசியல் அமைப்புச்சட்டம் மூலம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது.

இதற்கு முன்னால் 1983ல் மண்டல் வழக்கில், பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கானஇட ஒதுக்கீடு, அரசாணையாக வந்த போது தகுந்த அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் இல்லாத காரணத்தால் அப்போது நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இப்போது அரசியல் அமைப்பு சட்டதிருத்தம் மூலம் கொண்டு வருவதால் சட்ட சிக்கல் எதுவும் இல்லை. மேலும் இந்த 10% ஒதுக்கீட்டு சட்டத்தை விரைவாக அமுல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!