The TDS line is required to pay the Income Taxes Account: Co-Commissioner Information

நாமக்கல்: வருமான வரிச்சட்டத்தின்படி அனைவரும் டிடிஎஸ் வரி பிடித்தம் செய்து வருமான வரித்துறை கணக்கில் செலுத்துவது கட்டாயம் என்று வருமான வரித்துறை இணை கமிஷனர் தெரிவித்தார்.

சேலம் வருமான வரித்துறை அலுவலகத்தின், டிடிஎஸ் வார்டின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருமான வரி பிடித்தம் செய்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. கோவை வருமான வரித்துறை டிடிஎஸ் பிரிவு இணை கமிஷனர் பென் மேத்யூ வர்கி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

கருத்தரங்கில், வருமான வரி செலுத்துவோர் கணக்குகளை முறையாக பராமரிப்பதன் அவசியம், முன் வரியை தீர்மானிக்கும் முறை, வரியை குறித்த காலத்தில் செலுத்தும் முறை, டி.டி.எஸ். மற்றும் டி.சி.எஸ். பிடித்தம் செய்யும் முறை, இணையம் மூலம் வருமான வரி செலுத்தும் முறை, வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், வருமானவரி செலுத்துவோர்களை, நட்போடு அணுகி, அவர்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் வருமானவரித் துறை தொடர்ந்து செயல்படுகிறது என, கருத்தரங்கில் பங்கேற்ற அதிகாரிகள் குறிப்பிட்டனர். நாட்டின் வளர்ச்சியில் வருமான வரி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, வருமான வரி செலுத்த வேண்டியவர்கள், அவசியம் வருமான வரியை செலுத்த வேண்டும்.

டிடிஎஸ் பிடித்தம் செய்து அதை முறையாக செலுத்துவது அவசியம், சம்பளம் வழங்குவதிலும், பல்வேறு வர்த்தகத்திலும் பணம் செலுத்தும்போது உரிய டிடிஎஸ் வருமான வரியை பிடித்தம் செய்து கட்டுவது அவசியமாகும். வருமான வரியை முறையாக செலுத்தியும், வருமான வரி படிவத்தை குறித்த காலத்தில் தாக்கல் செய்தும், அபராதத்தை தவிர்க்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டதிரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!