The teenager who went near Perambalur 10 days ago, was recovered in a rotten state!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, உடும்பியத்தில் உள்ள தனியார் சர்க்கரை அருகே உள்ள பாலத்தின் அருகே உள்ள ஓடை புதரில். துர்நாற்றம் வீசியதால், வழிப்போக்கர்கள் பார்த்த போது, ஒரு மோட்டார் சைக்கிளும், அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலமும் கிடப்பதை பார்த்து, அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன வாலிபர் ராஜ் மகன் பிரபாகரன் (27) என்பதும், அவருக்கு பெற்றோர்கள் இல்லை என்பதும், அவர் நெல் அறுவடை எந்திரத்தில் டிரைவாக பணி செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, திருநாவுக்கரசு என்பவரது வாகனத்தை வாங்கி சென்றவர், வீடு திரும்பவில்லை, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும், பிரபாகரன் குறித்து தகவல் இல்லாத நிலையில் தொட:ர்ந்து தேடி வந்துள்னர். இந்நிலையில், இன்று அழுகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உறவினர் உறுதி செய்ததை அடுத்து, போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், வாலிபரின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.