The thief arrested in Perambalur and Padalur area! About 15.5 pounds of jewelry, 15 thousand in cash seized!
பெரம்பலூர் மற்றும் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
போலீசார் தனிப்படைகள் அமைத்தும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதிலும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த, ராதாகிருஷ்ணன் மகன் லோகேஸ்வரன் (38), பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக உறுதி செய்த பாடாலூர் போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து சுமார் 15.5 பவுன் நகை, ரொக்கம் 15 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.