the truck – Car collision Near in Perambalur, injured two people, including a police inspector
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவாளக்குறிச்சி என்ற பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்னால் செவர்லெட் கார் மோதி விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வரும் பழனிமுத்து (வயது 47), மற்றும் காவலரான ஜெயராமன் (27), ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலை நோக்கி சென்ற போது சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிச்சென்ற ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்சிங்(22), என்பவரை பாடாலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.