The unemployed will suffer drought, agricultural wage workers picket demanding Rs 25 thousand compensation

வறட்சியால் வேலையின்றி தவிக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இழப்பீடு ரூ.25 ஆயிரம் வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குன்னத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கமும், இணைந்து இன்று சாலைமறியல் போராட்டம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தனராசு தலைமையில் நடந்தது.

மாவட்டத் தலைவர் பி.பாலக்கிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் அ.கந்தசாமி, மாவட்ட பொருளார் பி.பாண்டியன், சி.பி.ஐ மாவட்டக்குழு எஸ்.சோலைமுத்து, மாவட்டத் துணைத் தலைவர், அ. உதயகுமார், ஆலத்தூர் ஒன்றிய பொருப்பாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், , மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் என்.தியாகராஜன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

மறியல் போராட்டத்தில், தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும், தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் இழப்பீடுக்கான காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வறட்சியால், தற்கொலை செய்து கொண்ட அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும்,

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 5 ஏக்கருக்கு மேற்பட்ட பெருவிவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்,

வறட்சியால் வேலையின்றி தவிக்கும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இழப்பீடு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாட்கள் வேலையினனை அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஆண்டு முழுவதும் வேலை வழங்கி தினசரி ஊதியம் ரூ.410 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்,

சுய உதவிகுழுக்கள் வங்கியல்லாத சிறுகடன் நிறுவனங்கள் மூலம் நிலமற்றோர் பெற்றுள்ள கடன்களை அரசே ஏற்க வலியுறுத்தியும், பெரியம்மாபாளையம் முதல் தங்கநகரம் வரை புதிய தார் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குன்னம் பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்து கோசமிட்டனர். இதனால் சுமார் கால் மணி நேரத்திற்கு மேலாக அரியலூர் – பெரம்பலூர் சாலை, குன்னம் – வேப்பூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குன்னம் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இதில், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ந.கோ. கலைச்செல்வன், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் கே.ஜெயராமன், சி.பி.ஐ வேப்பூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ராமராஜ், மாவட்டக் குழு ந.இளமுருகன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.அழகுராஜ், மாவட்டக் குழு வி.தொ.ச சேர்ந்த வசந்தா கலைச்செல்வன், க.ஆசைமுத்து , கே.அழகேசன், ஆலத்தூர் ஒன்றிய குழு க.சின்னப்பொன்னு, ஒன்றியப் பொருளாளர் கு.ஆறுமுகம், மூங்கில்பாடி க.ஜெயா, நொச்சிக்குளம் கிளை செயலாளர் இரா.பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பலர்பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பாலக்கிருஷ்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் உதயகுமார், இருதயராஜ், வெள்ளுவாடி கலியன், அனுக்கூர் தங்கராசு, நெய்க்குப்பை பரமேஸ்வரன், கள்ளப்பபட்டி முருகன், மாதர் சங்கம் விஜயராணி, வெங்கலம் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!