The UNIVERSAL DISABILITY IDENTITY CARD for all types of disabilities
பெரம்பலூர் : மத்திய அரசின் மூலம் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டை ( UNIVERSAL DISABILITY IDENTITTY CARD, UDID ) வழங்கப்பட உள்ளது. எனவே பெரம்பலூர; மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் http://www.swalvlambancard.gov.in என்ற இணையதள முகவரியில், தங்களது அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2, மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியிலுள்ள இ-சேவை கணிணி மையத்தியத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவ்வாறு பதிவு செய்யப்பட்டதன் விபரத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
எனவே பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மத்திய அரசின் ஒரே மாதிரியான அடையாள அட்டை பெற்று பயனடைய பெரம்பலூர் மாவட்ட நிர்வாகதின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.