The VAOs request to make public alternatives to the strike by the struggle
விவசாய நலச் சங்க மாநிலத் தலைவர் மோகனூர் பாலசுப்பிரமணியன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு :
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், வாரிசு, இருப்பிடம், ஜாதி சான்று, திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற வழியின்றி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, உடனடியாக கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துப் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதபட்சத்தில், தினமும் பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை தற்காலிமாக பணியமர்த்தி அரசு நலத்திட்ட உதவிகளை தடையின்றி பெற வழிவகை செய்ய வேண்டும். அல்லது கிராம உதவியாளர்களுக்கு பொறுப்பை வழங்கி நேரடியாக தாசில்தார் மூலம் தேவைப்படும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து கிராம நிர்வாக அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் முக்கியச் சான்றுகள் கேட்டு குவிந்துள்ள மனுக்கள் மீது தடையின்றி மக்களுக்கு கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.