The Village Service Scheme is the initiative of the World Social Services Association, near Namakkal
உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் போதுப்பட்டியில் கிராம சேவைத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
உலக சமுதாய சேவா சங்கம், நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நாமக்கல், போதுப்பட்டி கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் கிராம சேவைத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் மயிலானந்தன் வீடியோ கான்பரன்சிங் மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். சேலம் மண்டல தலைவர் உழவன் தங்கவேலு, இயக்குநர் முருகானந்தம், நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் மனவளக் கலையால் ஏற்படும் நோயற்ற வாழ்வு, கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரைப் பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, வாழ்க்கை நெறி, சமூதாய விழிப்புணர்வு உள்ளிட்ட நன்மைகள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து யோகா, மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை கற்றுக்கொடுக்கப்பட்டன. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.