பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவின் சுருக்கம் :
வேப்பந்தட்டை கிராமத்தில், சுமார் ஆயிரம் குடும்பங்கள் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரும், சுமார் 250 குடும்பங்கள் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் (சித்திரை) ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் முயல் வேட்டை திருவிழா நடக்கும் போது குதிரை வாகனத்தை தூக்கி வரும் போது தெருக்களில் பெண்கள் வந்து செல்ல முடியாமலும், அலம்பல் செய்து கொண்டு வந்து தொந்தரவு செய்வதாகவும், மேலும், அதை தட்டி கேட்டால் பொய்யாக புகார் அளித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறார்கள். இது போன்று 3 முறை பொய்யான புகார் கொடுத்ததால் நாங்கள் கடும் அவதிபட்டோம் என்று அம்மனுவில் தெரிவித்த அவர்கள், அன்றைய நாளில் அதே பகுதியில் வேதமாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. அங்கு அக்னி சட்டி அலகு குத்துதல் பொங்கல், மாவிளக்கு பூஜைகள் கொண்ட திருவிழா நடப்பதாகவும், கோட்டாசியர் அனுமதித்த நேரமான மாலை 4 முதல் 5 மணிக்குள் வரமல் மாலை 5.30 மணிக்கு மேல், கிளம்பி வந்து நாங்கள் செய்யும் வழிபாட்டை இடையூறு செய்வதுடன், அநாகரீகமாகவும், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், ஆடைகளை களைந்து அரைகுறையாக வந்து நடந்து கொள்கின்றனர். காவல் துறையினர் தடுத்தி நிறுத்தினாலும், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்த வந்து எங்களை தாக்க முயற்சிப்பதுடன் ஜாதிக் கலவரத்தை தூண்டுகின்றனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பும், நியாயமும் வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், ஊர் அமைதியை கெடுக்கும் வகையில் ஜாதிக் கலவரத்தை தூண்ட காரணமாக இருக்கும் 42 பேரின் பெயர்களை அடங்கிய பட்டியலையும் கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பாக உறுதி அளித்தனர்.