The woman who accused him of refusing to take action against his fake boyfriend is on fire at the police station!

பெரம்பலூர் அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம் சாட்டி குன்னம் காவல் நிலையம் முன்பு நேற்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி: பெண் காவலர் உட்பட மூன்று பேர் தீ காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா-ராணி தம்பதியரின் மகள் அகிலா(27), என்பவருக்கும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-காமாட்சி தம்பதியினரின் மகன் பாரதி (42), என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, பரத்குமார் (8), என்ற ஒரு மகனும், யாழினி(5), என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அகிலா வயலூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம்-அமுதா தம்பதியரின் மூத்த மகன் அமரதீபன்(29), என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்ததால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் ஊரை விட்டு வெளியேறி கள்ளக்காதல் ஜோடி திருப்பூர் சென்ற நிலையில், அகிலாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீசார் அகிலாவை கடந்த மே மாதம் கள்ளக்காதலனுடன் திருப்பூரிலிருந்து அழைத்து வந்து சமாதானம் பேசி, அகிலாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அமரதீபன் தன்னிடம் 50,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் ஏழரை பவுன் தங்க நகையை வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது குன்னம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், அவரது வசதி படைத்தவர் என்பதாலும், காவல் துறையில் அவரது உறவினர்கள் சிலர் பணியாற்றுவதாலும், குன்னம் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், புகார் கொடுக்க செல்லும் தங்களை தரக்குறைவான வார்த்தைகளால் வசை பாடுவதாகும் குற்றம் சாட்டி இன்று குன்னம் காவல் நிலையம் முன் தனது உடலில் அகிலா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதனைக்கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலர் ரீட்டா என்பவரும், அகிலாவின் சகோதரர் அசோக்ராஜா என்பவரும், அகிலாவை தடுக்க முயற்சித்து தீயை அணைத்தனர். இதில் அகிலாவிற்கு முகம் மற்றும் உடலிலும் 30 சதவீதமும், மற்ற இருவருக்கும் கை பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்பி.,மணி உத்தரவின் பேரில், மங்கலமேடு சரக டிஎஸ்பி., மோகன்தாஸ் தலைமையில் போலீசார் அகிலா உள்ளிட்ட அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய கள்ளக்காதலன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றம்சாட்டி இளம்பெண் ஒருவர் காவல் நிலையம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இதுகுறித்து, குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நடுவர் சிவகாமி சந்தர் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!