The women Help Centre Members who rescued the baby from the drunken husband and handed it over to the mother in Perambalur District

பெண்களுக்கு என்று தனியாக இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் பெண்களின் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வரும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரை தொடர்பு கொள்ள பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் 181 என்ற இலவச தொலைப்பேசியில் அழைக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த இணைப்பை தொடர்பு கொண்டு, தன்னை தன் கணவர் குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும், தனது கைக்குழந்தையை வைத்துக் கொண்டு கொடுக்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெண்கள் நல உதவிமைய உறுப்பினர்கள் அந்த பெண்ணை சந்தித்து அவரது குறைகளை கேட்டு அவரது கணவரை அழைத்து அவர்களுக்கு குடும்ப நல ஆலோசனை வழங்கி குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க செய்தனர். இதனால் அந்த பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய உரிய குடும்ப நல ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!