The worker killed in car – Moped crash near Namakkal
நாமக்கல் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் அருகே உள்ள அணியாபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (56), கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு நாமக்கல் – மோகனூர் மெயின் ரோட்டில் அணியாபுரம் அருகே உள்ள பங்கில் தனது டூ வீலருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு மெயின் ரோட்டைக் கடந்தார்.
அப்போது, நாமக்கல்லில் இருந்து மோகனூர் சென்ற கார் அவரது மொபட் மீது மோதியது.
இதனால் ஏற்பட்ட விபத்தில் ராமசாமி படுகாயமடைந்தர். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.