The youth handed over the money found in the Perambalur ATM to the police!
பெரம்பலூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நல்லபூவான். அரணாரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை 8.45 மணியளவில் எளம்பலூர் சாலையில் உள்ள ஏடி.எம்மி-ல் பணம் எடுக்க சென்றார். அப்போது, இவருக்கு முன்பாக பணம் எடுக்க சென்றவர் ரூ. 10 ஆயிரத்தை விட்டு சென்றுள்ளார். இதை பார்த்த நல்லபூவான் பெரம்பலூர் காவல் நிலையம் சென்று நடந்ததை கூறி, உரியவரிடம் சேர்பிக்க கோரி பணத்தை ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், எஸ்.எஸ்.ஐ சண்முகம் உள்ளிட்ட போலீசார் பாராட்டினர்.