Theft at 3 different locations in Perambalur 21 Sovereing Jewelry Cash Rs 45 Thousand Loot !!

பெரம்பலூரில் நேற்றிரவு இரு வேறு இடங்களில் நடந்த கொள்ளையில் 7 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் பட்டுப்புடவைகள் கொள்ளை போனது.

பெரம்பலூர் நகரில் உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜாதேசிங் (வயது 61). கடந்த நவ 26ம் தேதியன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அவருடைய மாமனர் இறந்து விட்டதால் அதற்கான காரியத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து வீட்டை திறக்க முயன்ற பொது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3பவுன் செயின், 1 பவுன் மதிப்பில் 4 ஜோடி தோடுகள்,1.5 பவுன் கைசெயின், 1 பவுனில் 2 காயின், அரைப்பபுவுன் மோதிரம், வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று, அரணாரை பிரிவு சாலைப் பகுதியில் உள்ள ஏ.வி.ஆர் நகரில், காரைக்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் அக்ரி படித்து வருகிறார். அதற்கு அவரது மனைவி பானு என்வரும் உடன்தங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த திங்களன்று காலை 10.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் பார்த்த வீட்டில் இருந்த 14 பவுன் நகை ரொக்கம் ரூ. 30 ஆயிரம், வெள்ளிக் கொலுசுகள், ஒரு பெரிய டிவி ஒன்றையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதே போல், பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயத 58), என்பவர் உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பட்டுபுடவைகள் உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டு உள்ள பனிமூட்டம் குளிரால் மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது கொள்ளையர்களுக்கு சாதகமாகி உள்ளளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!