Theft at Perambalur Vellanthangi Amman temple; Police investigation!
பெரம்பலூர் கடைவீதியின் தென்புறம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் உள்ளது. நேற்றிரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பூஜைக்கு உண்டான பூஜை பொருட்கள் மற்றும் பித்தளைத் தாம்பாளம் குத்துவிளக்கு தூபக்கால் அபிஷேக சாமான்கள் மற்றும் இண்வேட்டர் பேட்டரி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் மோப்ப நாய் மற்றும் தடவியல் கைரேகை நிபுணர்கள், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.