Theft at house and temple near Perambalur: Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் மகன் ராஜா (39). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷோபனா (30) இவருக்கு சிறுநீரக கல் பிரச்சினைக்கு, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று திரும்ப வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பணம் ரூ. 20 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதே போல, விளாமுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆலங்குடியான் கோவில் நேற்று வழக்கம் போல் நடை சாத்தப்பட்டது. இன்று காலை பூசாரி துரைராஜ் வந்து பார்த்த போது, கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டதோடு, கோவலில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தன. இது குறித்து 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரின் வழக்குப் பதிவு செய்த போலீசார் மோப்பநாய் பிரிவினர் மற்றும் கைரேகை பிரிவு போலீசார் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.