Theft of goats and chickens near Perambalur; Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் பிள்ளை மகன் பிரபு (40). இவருக்கு லாடபுரம் – மேலப்புலியூர் செல்லும் சாலையில் சொந்தமான வயல் காடு உள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு வயலில் உள்ள கொட்டகையை அடைத்து விட்டு அதனுள் ஆடு 3 கோழி கின்கினி கோழி, 2 சேவல்கள் பூட்டிவிட்டு வந்தார். இன்று காலை அதனை மேய்ச்சலுக்காக திறந்து விட பார்த்தபோது வயலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அதனை கொள்ளையடித்து போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், மேலப்புலியூர் லாடபுரம் சுற்றுப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.