Theft of temple Hundial near Perambalur: Information about may be Rs.50 thousand
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காருகுடி கிராமத்தில் அய்யனார் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள், அதில் இருந்த ரொக்கம் சுமார் ரூ. 50 ஆயிரத்தை எடுத்து சென்றாக கூறுப்படுகிறது.
அந்தக் கோவிலின் பூசாரி, இன்று காலை சுமார் 6. மணி அளவில் வயலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்து பார்த்தபோது கோவில் வாசல் திறந்து இருப்பதை பார்த்து அதிர்ந்து போய் ஊர் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் பூட்டு மட்டும் கிடத்தது.
இக்கோவிலில் இந்த திருட்டு நடைபெறுவது இரண்டாவது முறையாகும். முதல் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த திருட்டையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.