There are more than 10 government buses in Perambalur parked because there is no revenue: villagers are suffering!


தினந்தோறும் நிறுத்தப்படும் பேருந்துகளின் பட்டியல் பணிமனையின் தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று போதுமான வருவாய் ஈட்டவில்லை என தனியார் போல், கிராமங்களுக்கு செல்லும் சுமார் 2 ஆயிரம் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் இருந்தும் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

பழைய பேருந்துகளே பெயிண்ட் அடித்து இயக்கி வரும் வேளையில் தற்போது, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் போதுமான வருவாய் ஈட்டவில்லை என்ற காரனத்தை காட்டி இன்று இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கிராமப்புற பயனிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இது போன்று தினந்தோறும் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை முன்னறிவிப்பின்றி போக்குவரத்து கழக நிர்வாகம் நிறுத்தி வருகிறது.

மேலும் சில வழித்தடங்களில் நல்ல வருவாய் ஈட்டி வந்த வந்த பேருந்துகள் கூட சில தனியார் பேருந்துகளுக்கு சாதகமாக நிரந்தரமாக நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகள் போன்று வருவாயை மட்டும் கணக்கில் கொண்டு பேருந்துகளை இயக்காமல் பொதுமக்களுக்கு சேவை அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சேவைமனபான்மையுடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கொள்கையிலேயே இது நாள் நட்டக் கணக்கு காட்டினாலும், அரசு ஆண்டு தோறும் மானியம் அளித்து நடத்தி வருகிறது.

தனியாரிடம் அனைத்து பேருந்துகள் முழுவதையும் ஒப்படைத்தால் கலக்சன் இல்லை என்றால் பேருந்தை நிறுத்தி விடுவார்கள் என்று கருதிதான் பெரும்பாலான பேருந்துகளை அரசே இயக்கி வருகிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகங்கள் கலக்சனை காரனம் காட்டி பேருந்துகளை நிருத்தி வருவது வேதனைக்குரியது.

இது குறித்து ஒரு கிளைமேளாலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, வருவாய் குறைவாக உள்ள பேருந்துகளை நிறுத்த சொல்லி மேலதிகாரிகள் உத்தரவு நாங்கள் என்ன செய்ய முடியும் தெரிவிக்கிறார். மேலும், நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசின் இந்த செயல் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!