There is a pandal in Perambalur, but no water to quench the thirst!
தற்போது, அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் வீசி வருவதை முன்னிட்டு, தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனி மனிதர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போட்டிக் கொண்டு நீர் மோர், பந்தல் அமைத்து, பொது மக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து காத்துக் கொள்ள ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.
பெரம்பலூரில் அதிமுக, திமுக, மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல கட்சிகள் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர்.
தொடக்க நாளில், வெள்ளரி, தர்பூசணி, இளநீர், நீர், மோர், என வழங்கியவர்கள், அடுத்த நாளில் இருந்து, ஒரு சில இடத்தில் நீரும், மோரும், பல இடங்களில் நீரும் வழங்கி வருகின்றனர்.
ஆனால், பெரம்பலூரில் மதிமுக சார்பில் ரோவர் ஆர்ச் சந்திப்பு எதிரே அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலில், அக்கட்சியின் தலைவர்கள் வைகோ, துரை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் படங்கள் கொண்ட பதாகை மட்டுமே உள்ளது. பந்தலில் நீரையும் காணவில்லை, மோரையும் காணவில்லை.
இன்று மதியம் தாகம் தணிக்க வந்த பொதுமக்கள் எதிரே, அதிமுக, திமுக அமைந்திருந்த தண்ணீர் பந்தலில் தாகம் தணித்து சென்றனர்.
ஒரு வேளை ஞாயிறுக்கிழமை என்பதால் விடுமுறை மதிமுகவின் தண்ணீர் பந்தலுக்கு விடுமுறையோ என்னவோ தெரியவில்லை.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, ரோவர் ஆர்ச் பகுதிகளில் பிற கட்சியினர் அமைத்த தண்ணீர் பந்தல்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் அங்கு தாகம் தணித்து செல்கின்றனர்.
தண்ணீர் பந்தல் அமைப்பவர்கள் எப்போது எந்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்தால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.