There is a possibility of Prime Minister Modi coming to Perambalur: Annamalai information collected votes for Parivendar standing on the lotus symbol!

தமிழ் பாராளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு பகுதியில், பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சரித்திர வெற்றியாக 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரிவேந்தரை வெற்றி பெற செய்தீர்கள்! தற்போது அவர் உங்களை நம்பி மறுபடியும் களத்திற்கு வந்திருக்கிறார்.

உங்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறார். அவர், ராஜா வீட்டு கன்னுக்குட்டி இல்லைங்க, சாதாரணமாக உழைத்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பாரிவேந்தர் களத்திலே இறங்கி இருக்கிறார்கள்.

உங்களை மட்டும் நம்பி, தொடர்ந்து உங்களுக்காக அவர் செய்து இருக்கக்கூடிய பணிகளுக்கு அவர் வாக்கு சேகரிக்க வரவே கூடாது அந்த அளவுக்கு அவர் செய்திருக்கிறார்.

ஐந்தாண்டு காலமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வரக்கூடிய நிதியிலே உங்களுக்காக பணி செய்து இருக்கிறார். அதைத் தாண்டி தன்னுடைய தனிப்பட்ட நிதியில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய எல்லாக் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 1500 குழந்தைகள் இலவசமாக கல்வி பயின்றுள்ளனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1500 குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க ஐயா பொறுப்பு எடுத்துக் கொள்கிறார். உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் அரசு செய்யக்கூடிய வேலையை தாண்டி தனிப்பட்ட முறையிலே ஒரு அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அதனால் தான் நம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தாமரை சின்னத்திலே பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு அன்பை பெற்று பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாவேந்தர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறும் போது நரேந்திர மோடியின் நேரடி பார்வையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பாரிவேந்தர், நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்லி விட்டு போவதற்காக வந்து இருக்கிறேன்.

நீண்ட காலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய கனவு அரியலூர், பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல் பகுதிக்கான ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து முடிந்திருக்கிறது.

நிச்சயமாக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ரயில்வே திட்டத்தை நிச்சயமாக கொண்டு வந்தே தீருவோம், கொண்டு வந்தே தீருவோம். என்று வாக்குறுதி அளிப்பதற்கு கடமை பட்டிருக்கிறோம் சகோதர சகோதரிகளே.

400 எம்பிக்களை தாண்டி மோடி ஐயா அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர இருக்கிறார். பாராளுமன்றத்தில் அய்யா தொடர்ந்து பணி செய்யப் போகிறார்.

ஆனால் திமுக அப்படி இல்லை அப்பா மந்திரி பையனுக்கு போர் அடிக்குது அதனால் பையன பாராளுமன்ற வேட்பாளரா தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் ஒரே வீட்டில் எத்தனை பதவி நான் கொடுப்பீர்கள்?

அப்பா மந்திரி புல்லா எம்பின்னா யாரு தான் வேலை செய்வது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலை செய்வதற்காக ஒரு தனி அரசாங்கமே அண்ணன் பாரிவேந்தர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

33 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் யாருக்கும் எதுவும் செய்யவில்லை! மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது 2021ல் அடுத்த தேர்தல் வாக்குறுதி 511-ல் 20 வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை!

இன்றைக்கு திமுக வேட்பாளர் வந்தால் கேளுங்கள் 511 தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்று கேளுங்கள். இன்றைக்கு பெண்களை அவமானப்படுத்தக்கூடிய கட்சியாக திமுக செயல் பட்டு வருகிறது. அண்ணன் துரைமுருகனுடைய பையன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் நிற்கிறார்.

நேற்று முன்தினம் சொல்கிறார் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய சகோதரிகள், தாய்மார்களும் மினுக்கு, மினுக்குன்னு இருக்கிறார்கள் என்று
நீங்கள் எல்லாம் கேட்டீர்களா? விட்டீர்களா?

எதற்கு என்றால் அவர்கள் கொடுக்கக்கூடிய ஆயிரம் ரூபாயில் பெண்கள் எல்லாம் ஃபேரன் லவ்லி வாங்கி போட்டுக் கொள்கிறார்களாம் ! இதைவிட நம்முடைய சகோதரிகளையும் தாய்மார்களையும் அவமானப்படுத்தமுடியுமா? அந்த கேள்வியை உங்கள் முன்னால் நான் வைக்கிறேன்.

திமுக கொடுத்திருக்கக் கூடிய இலவச பேருந்தில் பெண்கள் சென்றால் ஓசி என்கிறார்கள். பெண்களை அவமானப்படுத்தக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் நமக்கு வேண்டாம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி நமக்கு வேண்டாம்.

நமக்கு பணி செய்யக்கூடிய அடித்தட்டு மக்களுக்காக பணி செய்யக்கூடிய இந்தியா டாக்டர் பாரிவேந்தர் மட்டும்தான் மீண்டும் வேண்டும் மோடி மட்டும்தான். தாமரைச் சின்னம் மட்டும் தான் வேண்டும்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பாராட்டக்கூடிய ஒரு உண்மையான மனிதர் பெரம்பலூர் தொகுதியில் நின்று கொண்டிருக்கிறார் ஒரு பணி செய்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்

அரசு செய்யக்கூடிய வேலையை தாண்டி உங்களுக்கு வேலை செய்வதற்காக அண்ணன் பாரிவேந்தர் நின்று கொண்டிருக்கிறார் அவரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை நிச்சயமாக அதனை நீங்கள் செய்வீர்கள் செய்ய வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை உங்களிடத்திலே வைக்கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் அனைவரும் நின்று கொண்டிருக்கிறோம் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக அனைவரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

பாரிவேந்தர் நம்முடைய வேட்பாளர், நம்முடைய தாமரை சின்னத்தில் நிற்கிறார். அதனால் ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், தொண்டரும் உயிரைக் கொடுத்து பாடுபட்டு பாரிவேந்தரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது நமது கடமை இன்று நமது மோடி தெரிவித்து இருக்கிறார்.

எனவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு தலைவரும் தொண்டரும் அடுத்த 20 நாட்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று நமது தாமரைச் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும். நம்மை நம்மை நம்பி பாரிவேந்தர் நம்முடைய தாமரை சின்னத்தில் நிற்கிறார்கள் உங்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை கடமை

எனவே சகோதர சகோதரிகளே பெரியோர்களே தாய்மார்களே உண்மையான மனிதன்! நம்மை நம்பி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலே நின்று கொண்டிருக்கிறார் . அடிப்படையில் ஒரு டுடோரியல் கல்லூரியை ஆரம்பித்து சாதாரண ஒரு மனிதனாக வாழ்க்கை பயணத்தை தொடங்கி தன்னுடைய நேர்மையால் உழைப்பால் மக்கள் செல்வாக்கால் முன்னேறி தான் சம்பாதித்த பணத்தை பெரம்பலூருக்கு கொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்

எல்லோரும் கல்வி பெறவேண்டும் இருக்கக்கூடிய எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என சம்பாதித்த பணத்தை உங்களுக்காக செலவு செய்கிறார்

இவரை எப்பொழுதும் நம்பலாம் மோடி ஐயாவினுடைய ஆதரவு பெற்ற, அன்பைப் பெற்ற ஏன் 2013-14ல் இன்றைக்கு உலகமே மிஞ்சக்கூடிய மோடி ஐயாவை முதல்வராக இருக்கும்போது குஜராத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்ததே பாரிவேந்தர் தான்

பாரதப் பிரதமராக இருக்கக்கூடிய நரேந்திர மோடிக்கு முதன் முதலாக கூட்டம் போட்டு அவர்களுக்கு ஆதரவாக பேசியவர் பாரிவேந்தர்.
இன்றைக்கு பத்து ஆண்டுகள் கழித்து பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொண்டனும் உயிரை கொடுத்து பாடுபட வேண்டும்.
அது மட்டுமல்ல சகோதர சகோதரிகளே மோடி பெரம்பலூருக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம், பாரிவேந்தருக்கு, ஆதரவாக வாக்குகள் கேட்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய சின்னம் தாமரை சின்னம் பாரிவேந்தர் அவர்களுடைய சின்னம் தாமரை சின்னம் ஊழலுக்கு எதிரான சின்னம் தாமரை சின்னம்.

ஏழை எளிய மக்கள் கல்வியிலே, பொருளாதாரத்தில், மருத்துவத்தில் முன்னேற வேண்டும் என்று சொன்னால் தாமரை சின்னம் என்பதை மறந்து விடாதீர்கள். திமுகவினர் எவ்வளவு பொய் சொன்னாலும் சரி, வாக்குறுதிகளை அள்ளிக் கொடுத்தாலும் சரி அவர்களால் ஒரு துறும்பை கூட கிள்ள முடியாது.

கொஞ்சம் ஏமாந்தீர்கள் என்றால் நிலாவை கொண்டு வந்து தட்டில் வைப்பேன் என்பார்கள், அதைத் தவிர எல்லாம் சொல்லிட்டான். நம்பி விடாதீர்கள் என்று கூறினார்.

கூட்டத்தில் ஐஜேகே மாநில தலைவர் ரவிபச்சமுத்து, மாநில பொதுசெயலாளர் ஜெயசீலன், விளம்பர பிரிவு மாநில செயலாளர் முத்தமிழ்செல்வன், மண்டல செயலாளர் காமராஜ், மாவட்ட தலைவர் ரகுபதி, பார்க்கவ குல சங்க மாவட்ட தலைவர் அன்புதுரை, பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமாக மாவட்ட தலைவர் கிருஷ்ணஜனார்த்தன், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன், உட்பட கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!