There is a possibility that the Tamil Nadu Chief Minister will also go to jail soon; IJK company president Parivendar speech!

வட இந்திய மாநிலங்களின் முதல்வர்களைப் போல விரைவில் தமிழக முதல்வரும் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் இன்று குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிரச்சார மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொரோனா காலம் போக மீதமுள்ள காலத்திற்கு மத்திய அரசு எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியாக வழங்கிய தொகை ரூ.17 கோடி முழுவதையும் மக்களுக்காக செலவிட்டுள்ளேன். இதற்கான வரவு செலவு கணக்குகளை புத்தகமாக வெளியிட்டு பொதுமக்களிடம் கொடுத்துள்ளேன். ஆனால் திமுக உறுப்பினர்கள் மத்திய அரசு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் நிதியினை மக்களுக்கு செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அவர்களால் இதுபோன்று வரவு செலவு கணக்குகளை கொடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். கூட்டணி கட்சியினரையும், தனது கட்சி தொண்டர்களையும் அடிமைகளாக திமுக தலைமை நடத்தி வருகிறது. அது அடிமைகளின் கூடாரம் என்று கூட கூறலாம் என்றார்.

திமுகவில் சமத்துவம், சமதர்மம். சகோதரத்துவம். ஜனநாயகம் இப்படி எதுவுமே கிடையாது . திமுக என்றாலே ஊழல் கட்சி என்று தான் பெயர் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே அவர்கள் வீட்டில் ஏராளமான நிதிகள் இருக்கிறார்கள். அதாவது கருணாநிதி, உதயநிதி, இன்ப நிதி என்ற பெயர்களில். அவர்களோடு

இதுபோல ஊழல் செய்த முதல்வர்களில் வட மாநிலங்களில் சிலர் சிறைக்கு சென்றுள்ளனர் அதேபோல தமிழகத்தின் முதல்வரும் சிறைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்ற பாரிவேந்தர், ஏழை எளிய மக்களுக்காக ஊழல் இன்றி நேர்மையாக இந்தியாவை ஆட்சி செய்து வரும் மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

ஐகேகே தலைவர் ரவிபச்சமுத்து, பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!