There is no place for talking about privatizing Tamilnadu government buses: Transport Minister Sivashankar interview!

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பேருந்துகள் தனியார் மையமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என பெரம்பலூர் அருகே செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் தாமதமாகியது. தற்போது அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது, எனவே விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கை துவங்கப்படும். 8 அல்லது 9 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதை நிர்மாணித்தவர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். தனியார் வசம் இருந்த பேருந்துகளை அரசுடைமையாக்கி நகர்புறத்தில் மட்டும் இயங்கி வந்த பேருந்துகளை கிராமப்புறங்களுக்கும் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தவர். அரசு பேருந்துகளை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்களுக்கான இலவச பயண திட்டம், பெண்களுக்கான இலவச பயண திட்டம் என இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பான முறையில் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள். எனவே இந்த திட்டங்கள் எப்போதும் போல தொடரும்.

ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை நான் பொறுப்பேற்ற பிறகு இரண்டாம் கட்டமாகவும், மொத்தமாக ஐந்து கட்டங்களாகவும் நடைபெற்றுள்ளது. ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒரு சில கோரிக்கைகள் மட்டும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண பட வேண்டியுள்ளது. விரைவிலே அதற்கான முடிவு எடுக்கப்படும். தற்போது சென்னையில் அரசு மினி பேருந்துகளை இயக்க புதிய வழித்தடங்களை கண்டறிந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன அவற்றில் எவ்வளவு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!