Thieves broke the lock of Perambalur district education office; They left disappointed to find nothing!
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில், இயங்கி வரும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு பணிக்கு வந்த இளநிலை உதவியாளர் பிரியா என்பவர் வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, அனைத்து பீரோக்களும், மேஜை டிராக்களும் திறந்து கிடந்தன. இது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பொருட்கள் எதுவும் களவு போகவில்லை என உறுப்படுத்தியோடு, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர், இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.
விளம்பரம்: