Thieves in Perambalur put black paint on CCTV, burst explosives and started theft!

பெரம்பலூர், வடக்குமாதவி சாலையில் உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ஞானசேகர் (45), இத்தாலியில் எலக்ட்ரிசியனாக பணிபுரிந்து வருகிறார். வீட்டில் மனைவி ரமாபிரபா (41), மகள்கள் மோனிஷா (12), கவினி (8) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

கடந்த 4 ம் தேதி ரமாபிரபா மற்றும் அவரது குழந்தைகள் கோயம்புத்தூரில் உள்ள அவரது தங்கை சரண்யா வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து லால்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை 06.30 மணிக்கு எதிர் வீட்டுக்காரர் நல்லேந்திரன் என்பவர் ஞானசேகரின் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு, போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஆகியோர் விரைந்து சென்று நடத்திய, விசாரணையில் வீட்டில் இருந்த பிரோவை உடைத்து கவரிங் நகைகளை தூக்கி வீசி விட்டு 9 கிராம் தங்க நகைகளை எடுத்து சென்றதும், வீட்டில் திருடுவதற்கு முன்பாக வீட்டின் அருகே வானவெடிகள் 30 -யை தொடர்ந்து வெடிக்கச் செய்ததும் தெரியவந்தது.

மற்றொரு வீட்டில் திருட்டு

பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் வசந்த் (27), இவரது அம்மா கலைசெல்வி (50) மனைவி சுமித்ரா (23) மகள் சிவநேத்ரா 1.5 வயது ஆகியோர் வசித்து வருகின்றனர்.
வசந்த் என்பவர் அருமடல் பிரிவு ரோடு அருகே கிரஷர் நடத்தி வருகிறார். நேற்று காலை 11.00 மணி அளவில் தனது உறவினர் திருமணத்திற்காக குடும்பத்துடன் காங்கேயம் சென்றுள்ளார்.
இன்று காலை, அருகே வசிக்கும் காமராஜ் (47) வசந்தின் வீட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சப் இன்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரொக்கம் ரூ. 25 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்ததது.


இந்த 2 திருட்டு சம்பவங்களிலும், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்கள் தடயங்களை வைத்து அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பாக பேசப்பட்டது.

பாலையூரில் முதியோர்களை கொலை செய்து கொள்யைடித்து சென்ற கொள்ளை, மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் இன்னும் போலீசார் புலானய்வு செய்யப்படாமல் கிடப்பிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான காவலர்களும், போலீஸ் ஸ்டேசன்கள் இல்லாத நிலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் புகழ் தரும் பணிகளிலேயும், விழிப்புணர்வு என பல போலீசாரின் பொன்னான நேரத்தை வீணாக்குகின்றனர். போக்குவரத்து, மர்ம சாவுகள், கொள்ளை, பாதுகாப்பு பணிகளில் போலீசாரின் கவனத்தை திருப்ப வேண்டும், மேலும், பல்வேறு கொலை கொள்ளைகளை வழக்குகளை தூசி தட்டி எடுத்து விசாரிக்கும் திறமை வாய்ந்த ஆண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்கக வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!