Thirukalyanam at Phoolampadi Tirupati Amman temple: DATO S PRAKADEESH KUMAR participation!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா கடந்த 6ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. யாகம் வளர்த்து பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதினர். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் திருமாங்கல்யத்தை தொட்டு வணங்கி கொடுத்தனர். பின்னர் கெட்டிமேளம் வாசிக்க திரவுபதிஅம்மன் திருக்கல்யாணம் சுபயோக சுபதினத்தில் நடந்து முடிந்தது.

பின்னர்தீபாராதனை காண்பிக்கப்பட்டு மணக்கோலத்தில் இருக்கும் சுவாமிக்கு ஆர்த்தி எடுக்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை காண வந்திருந்த பெண் பக்தர்களுக்கு மாங்கல்யம் குங்குமம் ஜாக்கெட் துணி ஆகியவை வழங்கப்பட்டது. Thirukalyanam at Phoolampadi Tirupati Amman temple: Datuk Pragatheeskumar participation!அதைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டத்தோ பிரகதீஸ்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது திரண்டிருந்த பக்தர்கள் சுவாமியை வரவேற்று பூஜை செய்து வழிபட்டனர்.பின்னர் சுவாமி திருவீதிஉலா முடிந்து கோவில் வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து கோவிலில் யாக பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று 22-ந்தேதி நாட்டுக்கல் மணக்காட்டிலிருந்து தீர்த்தகுடம்,அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சயும், அன்றிரவு விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷ் மற்றும் ஆக்காட்டி ஆறுமுகம் பங்குபெறும் மாபெரும் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் மற்றும் கிராம மக்கள் டத்தோ பிரகதீஸ்குமார்இளைஞர் நற்பணிமன்றத்தினர் செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!