Thirukkural Triuner Appreciation Prize Scheme: Students can apply – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ ஃ மாணவியருக்குத் தலா ரூ.10,000ஃ- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசாகத் தமிழ்வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களை மனனம் செய்து ஒப்பிக்கும் திறனுடைய மாணவ ஃ மாணவியர் இருப்பின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் எனும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!