Those who came in interview to Anganwadi work in Perambalur fell into faint. Collector car siege

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலிப்பணியிடமாக உள்ள 45 அங்கன்வாடி பணியாளர்கள், 58 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 109 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற முதன்மை அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணலில் பெரம்பலூர் வட்டாரத்தில் 155 நபர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 203 நபர்களுக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 165 நபர்களுக்கும் மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில் 73 நபர்களுக்கும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணலில் பெரம்பலூர் வட்டாரத்தில் 174 நபர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 83 நபர்களுக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 49 நபர்களுக்கும் மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில் 128 நபர்களுக்கும் கலந்துகொள்ள அனுமதி கடிதம் அனுப்பப்பட்டு, நேர்காணலுக்கு வருகை தந்த விண்ணப்பதரர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

மேலும், இன்று (31.08.2017) நடைபெறவுள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கான நேர்காணலில் பெரம்பலூர் வட்டாரத்தில் 130 நபர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 203 நபர்களுக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 174 நபர்களுக்கும் மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில் 82 நபர்களுக்கும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற நேர்காணலில் வந்திருந்தவர்களுக்கு கடமைக்காக நேர்காணல் செய்யப்பட்டனர். மேலும், ஏற்கனவே, அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒரு பட்டியல் தயார் செய்ததாக கூறப்படுகிறது. காலை 9 மணிக்கே நேர்காணலுக்கு வந்தவர்கள் இரவு சுமார் 9 மணி வரை நேர்காணல் செய்யப்படாததால் ஆங்காங்கே காத்து கிடந்தனர். பலர் கைகுழந்தைகளுடன் வந்து கடும் அவதிப்பட்டு கொண்டிருந்தனர். கர்ப்பமாக வந்த சில இளம்பெண்கள் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் தண்ணீர் வாங்கி கொடுத்து ஆசுவாசப் படுத்தினர்.

மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் நேர்காணலுக்கு வந்த சிலர் மயங்கி விழுந்தனர். மேலும், அங்கு குடிதண்ணீர் வசதி கூட செய்து தரப்படவில்லை. நேர்காணலுக்கு இரவாகியும் நேர்காணல் செய்யப்படாததால் ஆட்சியரின் கார் அருகே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர், அதிகாரிகள் சமசரம் செய்து அழைத்து சென்று கடமைக்கு நேர்காணல் நடத்தினர்.

நேர்காணலுக்கு வந்த பெண்கள் வேதனையுடன் பலர் வீடு திரும்பினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!