Thottiyam – Lalapet dam, I will bring a banana value adding factory in Thottiyam; BJP candidate Parivendar’s promise!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டியம் ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர் ஐ.ஜே.கே பாரிவேந்தர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்கு உட்பட்ட மணமேடு, கொளக்குடி, தொட்டியம், மேற்கு அலகரை, ஏலூர்பட்டி ,காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் பாரிவேந்தர் கடந்த முறை தேர்தலில் நான் போட்டியிட்டபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி உள்ளேன்.

நாமக்கல், துறையூர், பெரம்பலூர், அரியலூர் வரை ரயில்வே திட்டத்திற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டு இருக்கிறேன், மீண்டும் நான் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டால் கண்டிப்பாக ரயில்வே திட்டம் செயல்படுத்தப்பட்டு ரயில் இயக்கப்படும், ஆண்டுக்கு 50 பேர் வீதம் ஆறு தொகுதிகளில் இருந்து 300 பேருக்கு இலவசமாக கல்வி எனது கல்லூரியின் வாயிலாக வழங்கி வருகிறேன், இத்திட்டம் தொடர்ந்து செயல்பட என்னை நீங்கள் எம்.பியாக தேர்வு செய்ய வேண்டும், எனது மருத்துவமனையில் 1,500 குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சையினை வழங்குவேன்,

தொட்டியம் தாலுகாவில் இருக்கும் முள்ளிப்பாடி ஏரிக்கு நிரந்தரமாக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன், காவிரி ஆற்றின் குறுக்கே தொட்டியத்தில் இருந்து லாலாபேட்டை வரை தடுப்பணை கட்டி நீராதாரம் உயர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வேன், வாழைப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்காக தொட்டியத்தில் தொழிற்சாலை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுமாறு பரப்புரை செய்து வாக்குகள் சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போதுஇந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச் செயலாளர் ஜெயசீலன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கருணாகரன், பிஜேபி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிதாசன், பிஜேபி மாவட்ட துணை தலைவர் மணி , அ.ம.மு க ராஜசேகர், பாமக கருணாநிதி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜே.பி சண்முகம், த.மா.கா ரவிச்சந்திரன். கே.கே.எஸ் சுப்பிரமணி, ஒ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் ரெத்தினவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!