Three-day celebration in Coimbatore: Perambalur in-charge V. Jagatheesan requests DMK members to participate in large numbers!
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கை:
வரும் ஜூன் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் முதலமைச்சரும், திமுகத் தலைவருமான மு.க.ஸ்டாலின்தலைமையிலும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் பொருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும், முத்தமிழறிஞர், தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி அளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்முக வெற்றிக்கு கழகத்தை வழிநடத்தி சென்ற திமுக தலைவர் அவர்களுக்கு பாராட்டு விழா என நடைபெறும் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் இருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர் மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,
மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, தொண்டரணி, தொழிலாளர் அணி, மீனவரனி,நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, வர்த்தக அணி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி, சிறுபான்மையினர் உரிமைப் பிரிவு அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு, சுற்றுச்சூழல் அணி, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அமைப்புசாரா ஓட்டுனர் அணி, ஆகிய அணிகளின் நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு, அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.