Tipper lorry bullet bike collision near Perambalur; husband and wife killed!
பெரம்பலூர் அருகே டிப்பர் லாரி புல்லட் பைக் மோதிக்கொண்ட விபத்தில் கணவன் மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிச்சை மகன் கோவிந்தராஜ்(24). இவரது மனைவி ரேணுகா (20)
இருவரும் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பண்ணக்காரன் பட்டியில் நடக்கும் திருமண விழாவில் கலந்து கொள்ள புல்லட் பைக்கில் நேற்றிரவு சுமார் 11.45 மணி அளவில் பெரம்பலூர் – துறையூர் பை-பாஸ் சாலையில் செஞ்சேரி அருகே உள்ள தனியார் அக்ரி காலேஜ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே டிப்பர் லாரி புல்லட் பைக் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயம்பட்ட ரேணுகாவை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்த கணவன் மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணத்திற்கு சென்ற தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.