Tipper truck clash over school bus near Perambalur: 11 children injured!
பெரம்பலூர் அருகே இன்று காலை பள்ளி பேருந்தின் பின்புறம் டிப்பர் லாரி மோதியதில் ஆரம்ப பள்ளி படிக்கும் 11 மாணவர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூரில் உள்ளி தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்த பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு செஞ்சேரியில் இருந்து பெரம்பலூர் நகரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, துறையூர் சாலையில் இருந்து வந்த தனியாருக்குசொந்தமான டிப்பர் லாரி பள்ளி பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் பின்புறம் அமர்ந்து 11 மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். காயம் மாணவர்களை அங்கிருந்து பொதுமக்கள் உடடினயாக அருகில் இருந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இதில் ஒரு மாணவனுக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவர்களை அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ஆறுதல் கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தகவல் அறிந்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தங்களது குழந்தைகள் பார்த்து கவனித்து வருகின்றனர். இந்த விபத்தால் துறையூர் பெரம்பலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட் மாணவர்களுக்கு முதலுதவி மற்றும் ஆறுதல் தெரிவித்து விபத்து பயத்தில் இருந்து தேற்றினர். மேலும், பெரம்பலூர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.