TMC Demonstration in Perambalur demanding compensation for the insurance cover collected by the farmers
விவசாயிகளிடம் வசூலிக்கப்ட்ட காப்பீட்டு தொகைக்கான இழப்பீடு வழங்க கோரி பெரம்பலூரில் தாமக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் செட்டிக்குளம் பகுதியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும், மருதை ஆற்றில் ரூ.108 கோடி மதிப்பிலான தடுப்பணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் பருத்தி, மக்காச்சோளம், கரும்பு, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு வசூலிக்கப்ட்ட காப்பீட்டிற்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் காப்பீட்டு நிறுவனம், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பி உள்ளதை கண்டிப்பதுடன்,
மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இதில் அக்கட்சியின் கொள்கை பரப்பபு செயலாளர் காரை சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் கிருஷ்ண ஜனார்த்தனன், விவசாய அணி மாவட்ட செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.