jobsஇது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2015-2016 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையில் 2016 ஜீலை மூன்றாவது வாரத்தில் தொகுதி IV அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4931 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ – மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் தொகுதி IV தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நாளை காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் துவங்கப்பட உள்ளது.

மேலும் பயிற்சி அரங்கமானது 120 நபர்கள் அமரக்கூடிய இருக்கை, ஒலி-ஒளி அமைப்பு, படவீழ்த்தி மற்றும் மடிகணிணி உள்ளிட்ட வசதிகளுடன் பயிற்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தற்கால போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி செய்யப்படுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவர குறிப்பு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். என தெரிவித்துள்ளளார்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!