To avoid imports of food products, Malaysian youths should receive agricultural training from India: State Minister Saraswathy Kandasamy interviewed in Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடிக்கு மலேசியா தொழில் முனைவோர் முன்னேற்றம் மற்றும் கூட்டுறவு இணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வருகை தந்தார். அவரை பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார், மற்றும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தி அவர் தெரிவித்தாவது:
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளதாகவும், குறிப்பாக மலேசியாவில் விவசாயத்தில், இளைஞர்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் காய்கறி, தானியங்கள் இறக்குமதி அதிக அளவில் செய்யப்படுகிறது. அதனை தடுக்கவும், மலேசியாவில் அதிக அளவு மழைப்பொழிவு உள்ளது. மேலும் அங்குள்ள நிலங்களில் விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபடும் இளைஞர்களை இந்தியா போன்ற நாடுகளில் விவசாய பயிற்சி மற்றும் தொழில் நுட்ப கருவிகளை பாவித்தல் போன்றவற்றை பெற்று அவர்களை லாபமுள்ள தொழில் முனைவோர்களாக மாற்ற அரசு உத்தேசித்துள்ளது. அதற்காக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் வேளாண் பல்கலை கழகத்தில், வெள்ளோட்டமாக கலந்தாய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
இதே போல், இந்தியாவிற்கு சொந்தமான ஆயுர்வேதம், சித்தா மற்றும் யோக உள்ளிட்டவைகளை கற்றுக் கொள்ள மலேசியா அரசு அதிக ஆர்வமாக உள்ளது. அதோடு, கேரளா அரசு நடத்தி ஆயுர்வேத மருத்துவமனையை பார்வையிட இருப்பதாகவும், மேலும், அங்கிருந்து, ஆயுர்வேத தருவிக்க உள்ளதாகவும், தெரிவித்தார்.
மக்காச்சோளம் தீவனங்களுக்காக அதிகஅளவில் தேவைப்படுகிறது, அதற்காக, தொழிலபதில் டத்தோ. பிரகதீஸ்குமாரிடம் தனியார் நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதற்கு உரிய நேரமின்மையால் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் பூலாம்பாடி மக்களுக்காக செய்து வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகளையும், விவசாயிகளுக்காக காய்கறி கொள்முதல் சந்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதையும், ஏற்கனவே, மலேசியாவில் செய்து வரும் சமூகப் பணிகளையும் பாராட்டினார்.