To celebrate the centenary of the Kalaigar, Perambalur District DMK Executive Committee meeting decided!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.செயற்குழு கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் அ.நடராஜன் தலைமையில், மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி .இராஜேந்திரன் வரவேற்புரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்- மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, பெரம்பலூர் எம்.எல்.ஏ .பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனாஅண்ணாதுரை, துணைப் பெருந்தலைவர் சாந்தாதேவிகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணைப் பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல்பாரூக், மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஜீன்-03, அன்று கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறும் திருவாரூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாகக் கலந்து கொள்வது, ஜீன் மாதம் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் வார்டு,கிளை கழகங்கள் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் திமுக கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுக்கூட்டங்கள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது எனவும்,

தலைமை கழக அறிவுறுத்தலின் படி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வக்குச்சாவடி முகவர்கள உடனடியாக நியமனம் செய்து அந்த பட்டியலை மாவட்ட கழகத்திடம் வழங்கிட வேண்டும் என்றும்,தலைமை கழக அறிவுறுத்தலின் படி ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!