To close the raw materials manufactured to completely ban the plastic products must be closed: KMDK Eswaran

பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடைசெய்ய அவை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளை மூட வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

வருகிற பிப்.3ம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் உலக கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது. இதையொட்டி கொமதேக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநாட்டுத் திடலில் நடைபெற்றது. மாநாட்டு செலாளர் மாதேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

முதலாவது உலக கொங்கு தமிழர் மாநாடு கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. அப்போதைய மலேசிய பிரதமர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கொங்கு தமிழர் மாநாடு நடத்திட முடிவு செய்துள்ளோம். அதையொட்டி வருகிற பிப்.3ம் தேதி இரண்டாவது உலக கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது.

ஒற்றுமையே வலிமை, பன்பாடு போற்றுவோம், கலாச்சாரம் காப்போம் என்ற கோஷத்துடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், உலக அளவில் 26 நாடுகளைச் சேர்ந்த கொங்கு தமிழர்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். பல்வேறு நாடுகளிலும் தமிழகத்தில் இருந்து வேலைக்காகவும், வியாபாராத்திற்காகவும் சென்றவர்கள் திரளாக வசிக்கும் மலேசியாவில் இருந்து மாநாட்டில் கொள்ள இதுவரை 500 பேர் பதிவு செய்யுள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் தற்போது விவசாயிகள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினை விவசாய தோட்டங்களில் மின்வாரியம் மூலம் உயர்மின் கோபுரங்களை முயற்சிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாய உள்ளது. இதை எதிர்த்து தமிழகத்தில் 8 இடங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு கொமதேக முழு ஆதரவளித்து வருகிறது. கேரளாவில் தரைக்கு அடியில் புதைவட மின்பாதை அமைக்கின்றனர். தமிழக அரசு இதை மறுக்கின்றது. அரசு சார்பில் யார் வந்தாலும் நாங்கள் கேரளாவிற்கு அழைத்துச்சென்ற காட்ட உள்ளோம்.

தமிழகத்தில் விவசாய நிலங்களில் உயர்மின் கம்பங்கள் அமைத்தால் கம்பிகள் செல்லும் பாதையில் அதன் நிழல் விழும் பகுதிக்கு மட்டும் நிலத்தின் மதிப்பில் 15 சதவீதம் இழப்பீடு தருவதாக அரசு கூறுகிறது. சுமார் 5 ஏக்கர் பரப்புள்ள நிலத்தின் நடுவில் உயர் அழுத்த மின்சார லைன்கள் சென்றால் முழு நிலமும் பாதிக்கும், அந்த நிலத்தை விற்பனை செய்தால் வாங்கக்கூட யாரும் வரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தமிழகத்திலும் உயர்மின் கோபுரங்கள் அமைபதற்கு பதிலாக புதைவட பாதையில் மின்கம்பிகள் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதற்கு உயர்மின் கம்பங்கள் அமைப்பதைவிட இரண்டரை மடங்கு செலவாகும் என்று மறுப்பு தெரிவிக்கின்றனர். தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயலால் அனைத்து மின்கம்பங்களும் முறிந்துவிட்டன. இதற்காக பல கோடி ரூபாய் செலவும் செய்து அரசு மீண்டும் அதனை அமைத்து சீரமைத்து வருகிறது. இதற்கு பல ஆயிரம் கோடி செலவாகிறது. எனவே புதைவடம் மூலம் உயர் அழுத்த மின்கம்பிகளை பதித்தால் பிற்காலத்தில் இதுபோன்ற இழப்புகள் ஏற்படாது. தற்போது விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. எனவே அரசு தரைக்கடியில் மின்கம்பிகள் அமைக்கும் திட்டத்தை கொண்டுவர வேண்டும்.

வருகிற ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்திருக்கிறது. இது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்கமான பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யக்கூடிய மூலப்பொருட்கள் இந்தியாவில் மிகச்சில கார்ப்பரேட் கம்பெனிகள்தான் உற்பத்தி செய்கின்றன.

எனவே அவற்றை தடுத்து நிறுத்தினால் பிளாஸ்டிக்கை எளிதாக ஒழிக்கலாம். இது குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அந்த தொழிற்சாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கொமதேக நிர்வாகிகள் சூரியமூர்த்தி, பாலசுப்ரமணி, சின்ராஜ், பால் கந்தசாமி, ரமேஷ், நதிராஜவேல், சரவணன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!