To determine the salary based on the recommendation of a person group, the Health Inspectors Association requested
நாமக்கல் : ஒரு நபர் குழு பரிந்துரை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் நலச் சங்க மாநிலக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர்கள் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் முத்து நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இணை செயலாளர்கள் முகம்மது ரபி, மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலப் பொதுச்செயலாளர் ராஜா தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஒரு நபர் ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைப்பணியாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தி சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தும், தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில பொதுச்செயலாளர் யாரப் ஷெரீப் வரவேற்றார். முடிவில் கலிபுல்லா நன்றி கூறினார்.