
To fill the vacant posts of judge and state lawyers union federation request
நாமககல் : தமிழகத்தில் கேர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாநில வக்கீல்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில வக்கீல் சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் எஸ்.கே.வேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் செல்லராஜாமணி வரவேற்றார். பொருளாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
தமிழகத்தில் உள்ள ப ல்வேறு கோர்ட்டுகளில் நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பல்வேறு வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. எ னவே கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி மற்றும் ஊழியர்கள் பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும்.
கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் ஊழல்களை தடுத்த நிறுத்த ஐகோர்ட் தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவில் வழக்குகளில் போலீசார் தலைøயிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதை தமிழக முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபி தடுத்து நிறுத்த வேண்டும்.
காஞ்சிபுரம், அம்பத்தூர் உள்ளிட்ட கீழமை கோர்ட்டுகளுக்கு ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும். சேலம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் பார் கவுன்சில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் தலையிடக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் மாரியப்பன், சம்மேளன நிர்வாகிகள் மூர்த்தி, வாசுதேவன், பாலசுப்ரமணியம், முரளிபாபு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து திரளான வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.