பெரம்பலூர் அருகே வேப்பூரில் உள்ள பாரதிதாசன் பல்கலை கழக உறுப்பு மாதிரி மகளிர் கல்லூரியில், இன்று மறைந்த .அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாட்டு நல பணித் திட்டம் சார்பில் சுகாதர சீர் கேட்டிற்கு கிராம புறமா அல்லது நகர்புற மா என்ற தலைவில் பட்டி மன்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மூத்த பேராசிரியர் ரோசிலின்கிதா மற்றும் கணிணி பேராசிரியர் சங்கீதா ஆகியோர் தலைமை தாங்கினார்கள் மேலான்மை பேராசிரியர் Dr. மேகன் குமார் சிறப்புரை மற்றும் நடுவராக இருந்தார் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் சுகாதார சீர்கேர்டிற்கு கிராம புறம் மற்றும் நகர்புறம் என்று தலைப்பில் பேசினார்கள்.
இவர்கள் வாதங்களை கேட்டு Dr.மேகன் குமார் கூறுகையில் இந்த சமுதாயம் சுகாதார சீர்கேட்டிற்கு கிராம புறம் மற்றும் நகர்புறம் இரண்டுமே காரணம் என்று தீர்ப்பு கூறி மேலும் கிராம புறத்தால் வரும் சீர்கேட்டையும் மற்றும் நகர்புறத்தால் வரும் சீர்கேட்டையும் மாற்ற வருங்கால மாணவ மாணவிகளால் தான் முடியும் என்று பேசினார்.
முன்னதாக, நாட்டு நல பணித் திட்ட அலுவலர் ஜெயா அனைவரையும் வரவேற்றார். முடிவில் நாட்டு நல பணி திட்ட மாணவி பிரசாந்தி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.