To prevent sexual abuses of women Special Act Discussion at the meeting of Mahila Congress resolution Passed
நாமக்கல் : பெண்கள் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தனிசட்டம் இயற்றி தண்டனை வழங்க வேண்டும் என மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிதலைவர் ராகுல் காந்தி உத்திரவின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவி ஜான்சி ராணி வழிகாட்டுதலின்படி மகிளா காங்கிரஸ் பிரிவிற்கு தனிகொடியினை மாவட்ட மகளிர் காங்கிரஸ் பார்வையாளர் வக்கீல் சாரதா தேவிமுன்னிலை வகித்து அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அகில இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றதற்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மகிளா காங்கிரஸூக்கு தனிக்கொடி அறிமுகப்படுத்திய தலைவர் மற்றும் அகில இந்திய மகளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதா தேவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் அறிமுகப்படுத்திய சக்தி செல்வோன் ஆப் மூலம் பெண்களை அதிக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தனிசட்டம் இயற்றி தண்டனை வழங்கவேண்டும்.
தற்போது சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி ஆகியவற்றை கடுமையாக உயர்த்தி பொதுமக்களை பாதிக்கும் படி உள்ளதை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மீண்டும் பழைய கட்டண முறையை கொண்டு வரவேண்டும் உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக் நவீத், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் தனகோபால், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ராம்குமார், துணைத்தலைவர் குப்புசாமி,வட்டார தலைவர்கள் இளங்கோ,ஜெகநாதன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவி ராணி உள்ளிட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.