To provide child care leave 2 years demanded for female doctors

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் அரசு மருத்துவுமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். அரசு மருத்தவர்கள் அன்பரசு, அறிவழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்தியஅரசு, மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் படிகள், மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருவத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். பணிக்காலத்தில் இறப்போருக்கு நிதி தொகுப்பை உருவாக்க வேண்டும்.

பெண் டாக்டர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு 2 ஆண்டுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் கலா, அபர்ணா, செலினா, ஜாபர், தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!