To provide electrical connection, Officer arrested for accepting 10 thousand bribe from Farmer in Perambalur
பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 48) தனது வயலில் உள்ள ஒரு முனை மின் இணைப்பை, மும்முனை மின் இணைப்பாக மாற்றித் தரக்கோரி அண்மையில் பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அவரிடம் பெரம்பலூர் மின்வாரிய தெற்கு பிரிவு வணிக ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் (வயது 43), ரூ 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆறுமுகம், இதுகுறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரொக்க பணத்தை இன்று மாலை ஆறுமுகம் பெரம்பலூர் நான்கு ரோட்டிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின்வாரிய தெற்கு பிரிவு வணிக ஆய்வாளர் பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி.,சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் பாலசுப்பிரமணியனைக் கைது செய்தனர்.