To quench the thirst of passengers, 2 additional water tanks at Perambalur New Bus Stand: placed by the municipality!
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களின் வசதிக்காக தலா 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 வாட்டர் டேங்களை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20 கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு விற்கப்பபட்ட அம்மா குடிநீர் விற்பனையும் நிறுத்தப்பபட்டது.
ஏழை எளிய பயணிகள் தாகம் தீர்க்கும் வகையில் ஏற்கனவே 500 லிட்டர் கொள்ளளவுள்ள தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 2 தண்ணீர் தொட்டிகள் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பயன்பாடடிற்கு வைக்கப்பட்டு, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.