To raise fish, local fishermen can apply; Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021-22ன் கீழ் புதிய மீன் குளம் அமைத்து மீன்வளர்ப்பு செய்திட கட்டுமானம் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் இத்திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையிலும் மீன்விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் அரசின் தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை விரிவுப்படுத்திடவும், விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குநா;; அலுவலகம், அறை எண்.234, இரண்டாவது மேல் தளம், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மீன்துறை உதவி இயக்கநர் அலுவலகம் மற்றும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளள மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்திலோ, 04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலும், adfariyalur@gmail.com மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.