To save from the Usury Teacher, the Trader petitioned to the Perambalur Collector office!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூரை சேர்ந்த சிங்காரம் மகன் மனோகரன். இரும்பு கம்பி வியாபாரம் செய்து வரும் அவர், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ரமேஷ். ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும், கடந்த பல ஆண்டுகளாக பணத்தை வட்டிக்கு விடும் தொழிலை செய்து வருவதாகவும், அவரிடம், 2016 ம் ஆண்டு நூற்றுக்கு ரூ.2 வட்டி வீதம் 1 கோடியே 5 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், பெற்ற தொகைக்கு இணையாக அவர், கையெழுத்திட்ட, பூர்த்தி செய்யப்பட்டாத காசோலைகள், ரூ.20 பத்திரம், பச்சை மற்றும் வெள்ளை தாள் கொடுத்ததாகவும், ஆனால், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக வட்டி ரூ. 20 லட்சத்து, 10 ஆயிரத்தை எடுத்து கொண்டு, ரூ.84 லட்சத்து 90 ஆயிரம் மட்டும் கொடுத்ததாகவும், கடன் வசூலிப்பதற்கு சிறிய நோட்டு ஒன்றை கொடுத்ததாகவும், தினசரி வசூல் செய்ததாகவும், அதற்கான தவணைகள் முடிந்த பின்னரும், கூடுதல் தொகை கேட்டு கடந்த செப்.19 அன்று அவரை மிரட்டியதாகவும், பின்னர், அடுத்த நாள் பெரம்பலூர் காவல் நிலையத்திலும், அதற்கு அடுத்த நாள் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பினருக்கு துணைப் போவதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவரது உடைமைகளை காப்பாற்றித் தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.