To switch to a different court, demanding trial for murder case Gokulraj: collector Petition to Namakkal
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சேலம் மாவட்ட அமைப்பாளர் ப.ஜெயபால், யுவராஜ் மனைவி சுவிதா மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் இன்று அளித்த மனு விவரம்:
ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் இறப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில்வி விடுவிக்கப்பட்டிருந்த 13 பேரும், விசாரணை நீதிமன்றமான நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி 13 பேரின் ஜாமினையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
வழக்கை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 13 பேரின் ஜாமீன் உத்தரவும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதி அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி வழக்கை விரைந்து முடித்திட அரசுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.